Jun 20, 2009

ஆனந்த ஜோதி

ஆனந்த ஜோதி

90 F வெயில்.'மயக்கமா கலக்கமா' மனநிலை. என்னை எனக்கே நினைவு படுத்திய பாடல். Yes!!!!!!!!! I can be happy with small things. I just love the way, I am. What made me happy like hell, is the a small bit of tune in this song and the memory it brings back.

http://www.youtube.com/watch?v=UU2s9q7_MTI


கடவுள் இருக்கின்றார்


கடவுள் இருக்கின்றார்

கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!

காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா....ஆ....!
கண்ணுக்கு தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!

இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இசையை ரசிக்கின்றதா இசையின்
உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா...அ...
வெளியே தெரிகின்றதா!

கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!

புத்தன் மறைந்து விட்டால் அவன் தான்
போதனை மறைகின்றதா
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிகின்றதா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா....அ...
சஞ்சலம் வருகின்றதா!

கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!

தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது...உ...
காக்கவும் தயங்காது

கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!

Dec 12, 2007

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மஹாசக்திக்கு விண்ணப்பம்

வாழ்க்கையில் எல்லாமே serendipity..coincidence..ஒத்திசைவு..எதிர்பாராத ஒத்திசைவு தான்..why do we born in this certain place? why do we live in this certain place? why do we do, what we do? why we like this certain poems? why do we like a certain person so much? இந்த நூற்றாண்டில், இந்த நிமிடத்தில் நான் நானாக இவ்வுலகத்தில் இருப்பதற்க்கு..யாரை பாராட்டுவதென்று தெரியவில்லை.எனக்கு இந்திரா பார்த்தசாரதியை அறிமுகம் செய்து வைத்த என் நண்பருக்கு இப்போதைய பாராட்டுக்கள்.



இந்திரா பார்த்தசாரதியின்..'தந்திர பூமி'யில..இந்த பாடல்.மேற்கோள் செய்யப்பட்டு இருந்தது.. இன்று பாரதியார் கவிதைகள் புரட்டிய போது தலைப்பு பார்த்து உள்ளே வந்தால்..அதே பாடல்..எனக்குப் பிடித்திருந்தது..பதிவு செய்தேன்.

மோகத்தை கொன்றுவிடு-அல்லா லென்றன்
மூச்சை நிறுத்தி விடு;
தேகத்தை சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனை சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் செய்வபளே !

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தை போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு;
இந்தப் பதர்களையே - நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலும் - உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே.


உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலெ - இந்நாய்
சிறுவேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவி இருப்பவளே!